தமிழகத்தில் முருங்கைக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 40 ரூபாயாக இருந்த முருங்கைக்காய் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோடை மழை காரணமாக முருங்கைச் செடியில் இருந்த பூக்கள் மற்றும் பிஞ்சுகள் என அனைத்தும் உதிர்ந்து விட்டது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து முற்றிலும் குறைந்தது. அத்துடன் தேவை அதிகரித்ததால் விலை கடுமையாக உயர்ந்து உள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.