பாகிஸ்தான் பெண் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்ததை ஆடிப்பாடி கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் அவர் அண்மையில் விவாகரத்து செய்தார். இதை நடனப் பார்ட்டி வைத்து கொண்டாடினார். விவாகரத்துக்கு பிறகு வாழ்க்கை வீணாகி விடுமோ என கவலைப்படும் பெண்களுக்கு மத்தியில் இவர் விவாகரத்தைக் கொண்டாடியதைப் பார்த்த பாகிஸ்தான் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.