மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் மானிய விலையில் விதை நெல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிப்பட்டி பகுதியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் குறைந்த வயதுடைய 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட புதிய நெல் ரகங்கள் கோ 51, ஏ.டி.டீ 54 மற்றும் ஏ.டி.டீ 57 சான்று பெற்ற விதைகள் 50 சதவீத மானியத்திலும், பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட என்.எல்.ஆர்., கே.ஜி.எல்., டி.கே.எம் 13 மற்றும் ஏ.எஸ்.டி 16 சான்று மற்றும் ஆதார நெல் விதைகள் கிலோவுக்கு ரூ.17.50 மானிய விலையில் வாடிப்பட்டி, சோழவந்தான், மற்றும் நாச்சிகுளம் வேளாண் விரிவாக்கம் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் சாகுபடிக்கு உயிர் உரங்கள், நெல் நுண்ணுாட்டம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.