தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மூலம் முதல்முறையாக ஓராண்டில் ₹15,542 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 7% வட்டியில் குறுகிய கால பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. 2023-24இல் 18,36,345 விவசாயிகளுக்கு ₹15,542 கோடியும், 2023-24இல் டெல்டா மாவட்டங்களில் 5,00,380 விவசாயிகளுக்கு ₹3,744 கோடியும் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.