நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி.எம். கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் உதவித்தொகை மூன்று தவணையாக 2000 ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக பதவி ஏற்றதும் 17 வது தவணை தொகையை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து இன்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது