கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நேற்று இரவு பலி எண்ணிக்கை 16 ஆக இருந்த நிலையில் தற்போது 29 அதிகரித்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.