கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ள 16 பேருக்கு தொடர்ந்து டயாலிசிஸும் , மூச்சு விடுவதில் சிரமப்பட்ட 10 பேருக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு ஐ சி யு பிரிவில் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.