கள்ளக்குறிச்சியில் விசாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடித்தது சாராயம் அல்ல வெறும் மெத்தனால் கலந்த தண்ணீர் என்பதே சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த தண்ணீரில் 29.5% மெத்தனால் கலக்கப்பட்டது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. தண்ணீரில் 4.5 சதவீதம் மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.