விஷச்சாராய பலிக்கு காரணமானவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மது கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என்ற அவர், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.