அடுத்தடுத்த ஆண்டுகளில் விஷச்சாராய மரணங்கள் ஏற்படுகிறது என்றால் அரசு எவ்வளவு அலட்சியமாக செயல்படுகிறது என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னுடைய நண்பன் உள்ளிட்ட பலரை இந்த விஷச்சாராயத்தின் மூலம் இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்த அவர், இதனை எதிர்த்து ஆளும் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் குரல் எழுப்பவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.