கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இது தொடர்பாக பேசிய அவர், பாஜகவின் சார்பாக சிபிஐ விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார். சாராயம் விற்றவர்களுக்கும் திமுகவினருக்கும் தொடர்பு இருப்பதால் சிபிசிஐடி விசாரணை நியாயமாக நடக்காது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.