கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது. விஷச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கும் 61 பேரில் 6 பெண்களும் அடங்குவர். ஆகையால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்கும் மகளிர் ஆணையம், குழுவின் தலைவராக குஷ்புவை நியமித்திருக்கிறது.