கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான மாதேஷ் நண்பர்களான ஹோட்டல் உரிமையாளர் சக்திவேல் மற்றும் மீன் வியாபாரி கண்ணன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில் மாதேசுக்கு மெத்தனால் கடத்த உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண்ருட்டி பகுதியில் சக்திவேல் ஹோட்டல் மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகின்றார். கண்ணன் மீன் வியாபாரம் செய்து கொண்டு கள்ளச்சாராயம் கடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.