கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்துக்கு 65 பேர் பலியான நிலையில், 229 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதையடுத்து டெல்லிக்கு விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த தலைவர்கள் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சிபிஐ விசாரணை கோரி மனு அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.