வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை ஏற்படுவது சகஜம். இவை காய்ச்சல் மற்றும் நோய்க்கு வழிவகுக்கும். வீட்டிலிருந்து அவற்றை அகற்ற இதை பின்பற்றவும். பிரியாணி இலையை பொடியாக அரைத்து கற்பூரம் சேர்த்து மூலைகளில் வைக்கவும். அவை இதன் வாசனையால் வீட்டை விட்டு ஓடிவிடும். போரிக் பவுடரை பேஸ்ட் செய்து சிறு உருண்டைகளாக உருட்டி கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில் வையுங்கள். வேப்ப இலைகளை பேஸ்ட் செய்து மூலைகளில் வைத்தாலும் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.