முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காலில் விழுந்து ஓபிஎஸ் ஆசிர்வாதம் வாங்கினார். 50 வருடங்கள் மக்கள் பணி செய்ததற்காக சென்னையில் வெங்கையா நாயுடுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஓபிஎஸ், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதுடன் காலில் விழுந்து ஆசிபெற்றார். இதையடுத்து, தாயாரின் காலில்தான் விழ வேண்டும் என ஓபிஎஸ்ஸுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.