முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்க்கை வரலாறு புத்தகம் உள்ளிட்ட 3 புத்தகங்களை மோடி காணொலி மூலம் வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமலான எமர்ஜென்சியில் வெங்கையா நாயுடு 17 மாதங்கள் சிறையில் இருந்ததாகவும், எமர்ஜென்சி எனும் நெருப்பை நேரில் சந்தித்த வெங்கையா நாயுடுவை உண்மையான காம்ரேடாக தாம் கருதுவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.