கஹஃஜிஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹகிகிகிஜிக்குகின்றே 311விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். பட்டாசு தயாரிக்க கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.