விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில், மாவுக் கல் தொங்கணி, சங்கு வளையல்கள், கருப்பு நிறப் பதக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பண்டைக் கால தமிழ்ப் பெண்கள் அணிகலன்களாகப் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் தள இயக்குநர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார். 5,000 ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், 3ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.