நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது வாழ்வில் வெற்றியும் தோல்வியும் நிகழ்வது இயல்பு. ஸ்மிருதி இரானி குறித்தோ அல்லது வேறு எந்த தலைவர் குறித்தோ இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிறரை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளமே தவிற, வலிமை அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.