வெளிநாடு செல்லும் அனைவரும் வரி துறையின் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்று உள்ளது. அனுமதி சான்றிதழை பெறுவது கட்டாயம் என்று பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இதனை தொடர்ந்து நிதி முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதிகளவு வரிபாக்கி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வரி அனுமதி சான்றிதழ் தேவை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.