தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வெளியூரிலிருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சார தொழில் நடத்தி வந்த ராஜன் (68) என்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தில் நின்ற இசக்கி துரை என்பவரை அணுகிய ராஜன் தன்னிடம் பெண்கள் இருப்பதாகக் கூறி அழைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த இசக்கி துரை போலீசில் புகாரளித்ததை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராஜனை கைது செய்த போலீசார் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த 3 பெண்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.