சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போட்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில், யோகி பாபு 3 மணி நேரம் தாமதமாக வந்து கலந்துக் கொண்டார். மற்றொரு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்ததால் தாமதமானதாக அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இருந்தும் பத்திரிகையாளர் ஒருவர் விடாமல் கேள்வி கேட்டதால், “வெளியே வா பார்த்துக் கொள்கிறேன்” என நகைச்சுவையாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.