ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து ₹91க்கும், கிலோ வெள்ளி ₹2,000 உயர்ந்து ₹91,000க்கும் விற்பனையாகிறது. பட்ஜெட் நாளான ஜூலை 23ஆம் தேதி ₹92,500ஆக இருந்த கிலோ வெள்ளி விலை மெல்லமெல்ல குறைந்து நேற்று ₹ 89,000க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ₹2000 அதிகரித்துள்ளது.