ரத்த சொந்தங்கள், அல்லது உறவினர்கள் தவிர வேறு யாருக்காவது ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்து கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹10,000 அபராதம் என்று ரயில்வே சட்டம் திருத்தப்பட்டுள்ளது. ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதில் பல மோசடிகள் நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் பிறருக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொடுப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.