தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையில், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலையில்லா இளைஞர்களை தொழில் முனைவோர்களாக ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பு, 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும். தொழில் தொடங்க உள்ள மாவட்டத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்றால் விதிமுறை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.