தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி நடிப்பில் ஒருவர் மழை பெய்யும் போது சந்திக்கும் பிரச்சனைகளை கதைக்களமாக கொண்ட உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்த், AI தொழில்நுட்பம் மூலம் தோன்ற உள்ளார். இந்த நிலையில் AI தொழில்நுட்பத்தால் திரையுலகில் வேலை இழந்தால் விவசாயம் செய்வேன் என்று நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.