வேலை தேடும் பெண்களை குறி வைத்து சில கும்பல் மோசடியில் ஈடுபடுவதால் கவனமுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். உரிமம் வைத்துள்ள வேலை வாய்ப்பு ஏஜென்சிகளை மட்டுமே வேலைக்கு அணுக வேண்டும் எனவும் ஆன்லைனில் செல்போன் நம்பர், முகவரி மற்றும் வங்கி பரிவர்த்தனை விவரத்தை பகிர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களின் சிலர் அங்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடி வேலை அளிக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதனால் தமிழக பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அவர்களுக்கு போதிய ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கவும் 181 இலவச உதவி எண் நடைமுறையில் உள்ள நிலையில் இதில் அனைத்து பிரச்சனை குறித்து ஆலோசனை பெறலாம்.