விவசாயிகள் விரும்பாத வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஒரு வருடம் போராட்டம் நடத்தினர். ஆனால் போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று பாஜக அரசு கூறியது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்படவில்லை. நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று இன்று நடைபெற்று வரும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.