குப்பை தொட்டிக்குள் கிடந்த சுமார் 5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை மீட்டு கொடுத்த மாநகராட்சி வாகன ஓட்டுனருக்கு சென்னை மேயர் பிரியா வாழ்த்து தெரிவித்துள்ளார். வாகன ஓட்டுனரான அந்தோனி சாமிக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர் சிறப்பித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில் மேயர் ப்ரியா , “கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி” திருக்குறளை ஒன்றையும் மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.