மின்கட்டண உயர்வைக்கண்டித்து, சென்னை எழும்பூரில் பா.ம.கவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென, அப்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக எம்எல்ஏ ஜிகே மணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று, நா.த.க சார்பில் ஜூலை 21ஆம் தேதியும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம் சார்பில் ஜூலை 25ஆம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.