மத்திய பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும் என்றால் அதற்கு இடம் போதாது என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். நிதி கொடுக்கவில்லை என்று கூறிவிட்டு முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லாதது சரியல்ல என்று விமர்சித்த அவர், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து அவர் கடமை தவறியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கூட்டத்தை பத்து மாநில முதல்வர்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.