2024 யூரோ கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது ஸ்பெயின் அணி. இதற்கு 16 வயது வீரர் லாமைன் யமல் அடித்த கோல் காரணமாக அமைந்திருக்கிறது. பிரான்சுக்கு எதிராக யமல் தனது முதல் யூரோ கோலை அடித்தார். இதன்மூலம், யூரோ கோப்பை வரலாற்றில் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். இதற்கு முன், ஸ்விட்சர்லாந்தின் ஜோஹன் 18ஆவது வயதில் (2004) கோல் அடித்ததே சாதனையாக இருந்தது.