ஸ்மார்ட் போன் கையில் இல்லாத பொழுது 50 சதவீதம் இளைஞர்கள் கவலை கொள்ளாவதாக பிபிசி செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஸ்மார்ட்போன் உபயோகிக்காமல் இருக்கும் Challenge-ல் பங்கேற்ற இளைஞர்கள் நிறைய புதிய விஷயங்களை கற்பதுடன், பலருடன் எளிதாக உரையாடுகின்றனர்.
தங்களின் கற்பனைத்திறன் மீண்டும் செயல்பட தொடங்கியதாக உணர்கின்றனர். ஸ்மார்ட்போன் இல்லாத நேரத்தில் தங்களின் Snap Streak குறித்து கவலைக்குள்ளாவதாகவும், இணைய உலகத்தின் தொடர்பில் இருந்து வெளியேறிவிடுவோம் எனவும் பயப்படுகின்றனர் என்று ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.