இந்தியாவிலிருந்து அதிகளவில் ஏற்றுமதியாகும் பொருட்களில் முதல் 5 இடங்களில், ஸ்மார்ட் போஃனும் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவில் தயாராகும் செல்போன்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது, 2024ஆம் ஆண்டில் 42.2% வளர்ச்சி கண்டுள்ளது. செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், செல்போஃன் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.