தமிழ்நாட்டில் இருந்து 5,801 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட நிலையில் முதல் கட்டமாக 326 பேர் நேற்று சென்னை வந்தடைந்தனர். இவர்களை நேற்று நேரில் சென்று வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழகத்திலிருந்து சென்றவர்களில் 10 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாகவும் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் கூறியுள்ளார். மெக்காவிற்கு செல்லும் வழியில் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.