இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த 6 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில், அடுத்த 2 மாதங்களுக்குள் அவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட சம்மதிக்க வைக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். அடுத்தடுத்து டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா எப்படி பயன்படுத்தப்படுகிறார் என்பதை பொறுத்தே, இந்தியா வெல்ல முடியாத அணியாக மாறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.