ஜப்பானில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபிலிகோ ஜுவல்லரி வாட்டர் கம்பெனி தயாரித்துள்ள இந்த வாட்டர் பாட்டில் ஸ்வரோவ்ஸ்கி படிகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள தண்ணீர் ரோக்கோ மலையில் இருந்து பெறப்படுவதாகவும் அதனால் ஆக்ஸிஜன் அளவு மற்ற நீரில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.