மாதந்தோறும் ₹64,583 சம்பளம் வாங்குவோர் ஆண்டுக்கு ₹7,75,000 வருமானம் ஈட்டியிருப்பர். அதில், ₹75,000 நிலையான கழிவு போக ₹7,00,000க்கு வரி கணக்கிடப்படும். இதில் முதல் ₹3 லட்சத்திற்கு வரி விலக்கு என்பதால், மீதி ₹4 லட்சத்திற்கு 5% வரி கணக்கிட்டால் ₹20,000 வரி செலுத்த வேண்டியிருக்கும். பிரிவு 87A படி ₹25,000 வரை வரி தள்ளுபடி இருப்பதால், புதிய வருமான வரி முறையில் வரி செலுத்த வேண்டியதில்லை. இதனால் ₹64,583 வரை சம்பளம் வாங்குவோருக்கு ஜீரோ வரி தான்.