பிரதமரின் இலவச வீடு வழங்கும் 2.0 திட்டத்தின் கீழ் ஒரு கோடி ஏழை மக்களுக்கு வீடு கட்ட ரூ.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றிய அவர், 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 100 சாலையோர உணவு மையங்களை உருவாக்கும் திட்டத்தை அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.