தமிழகத்தில் நில உரிமை உள்ள நலிவுற்ற மக்கள் பயன்பெறும் விதமாக தாமாக வீடுகட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் 1 லட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புறங்களில் நில உரிமை உடைய நலிவுற்ற மக்கள் தாமாக வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் மாநகரங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் 1 லட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும்.
மேலும் வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மகளிர் மேம்பாட்டிற்காக 2000 மகளிருக்கு சிறப்பு சுயதொழில் பயிற்சி வழங்கப்படும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5000 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.