விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், முதல்சுற்றில் இருந்தே முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தற்போது 10,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். தற்போது 3ஆவது சுற்று நடந்து வரும் நிலையில், திமுக வேட்பாளர் 18,057, பாமக வேட்பாளர் 7,323, நாதக வேட்பாளர் – 1,120 வாக்குகள் பெற்றுள்ளனர்.