பீகாரில் மாநிலம் சுபால் பகுதியில் இன்று 5 வயது சிறுவன் பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்துள்ளார். அப்போது 3ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டான். இதனால் சிறுவனின் கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. காயம் அடைந்த சிறுவனை ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் நர்சரி படிக்கும் சிறுவன் துப்பாக்கியால் சுட்டதாகவும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.