10 ஆண்டுகளில் இந்திய அணி 5 முறை இறுதிப் போட்டிக்குச் சென்ற நிலையிலும் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. 2014இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, 2017இல் நடைபெற்ற சாம்பியன் டிராபி, 2023 உலகக் கோப்பை, 2 முறை டெஸ்ட் சாம்பியன் உள்ளிட்ட அனைத்து போட்டியிலுமே இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தொடர் தோல்விக்கு நாளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்தியா முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.