UIDAI ஆணையத்தால் வழங்கப்படும் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம் ஆகும். அப்போதுதான் அதில் உள்ள தகவல்கள் துல்லியமாக இருக்கும். சில தகவல்களை ஆதார் ஆணைய இணையதளம் மூலம் நாமே இலவசமாக புதுப்பிக்கலாம். புகைப்பட மாற்றம் போன்றவற்றை ஆதார் ஆணையம், இசேவை மையத்துக்கு நேரில் சென்று கட்டணம் செலுத்தி மாற்றலாம்