கீழடியில் நடைபெற்று வரும் 10ம் கட்ட அகழாய்வு பணியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இவை 58 சென்டிமீட்டர் மற்றும் 96 சென்டிமீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்புறம் சிவப்பு வண்ண பூச்சுடன் இருந்த இந்த ஓடுகள் 45 சென்டிமீட்டர் நீளம், 43 சென்டிமீட்டர் அகலத்தில் இருந்ததாக தெரிகிறது. முன்னதாக கடலூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் ராஜராஜ சோழன் காலத்து நாணயம் கண்டறியப்பட்டது.