குஜராத்தில் தனியார் நிறுவனத்தில் பத்தாயிரம் காலி பணியிடங்களுக்கு 1800க்கும் மேற்பட்டோர் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் வேலை வாய்ப்பு இன்மை காணப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதில் அளித்த பாஜக எம் பி மன்சுக் வசாவா, சம்பவத்திற்கு அந்த நிறுவனமே காரணம் என்றும் இது போன்ற மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.