எக்ஸ் தளத்தில் அதிக நபர்கள் பின் தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி, 10 கோடிக்கும் அதிகமானோர் பிரதமர் மோடியை பின் தொடர்கின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை 3.81 கோடி பேரும், துபாய் அதிபர் ஷேக் முகமதுவை 1.12 கோடி பேரும் பின் தொடர்கின்றனர். இந்தியாவை பொறுத்தமட்டில், ராகுல் காந்தியை 2.64 கோடி பேரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை 2.75 கோடி பேரும் பின் தொடர்கின்றனர்.