கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியானது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கள்ளச்சாராயமும், திமுகவும் பின்னிப் பிணைந்துள்ளதாக சாடிய அவர், முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 1,000 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.