10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவின்போது, மறுகூட்டலுக்கு மாணவர்களிடம் ரூ.505 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த நீதிமன்ற மதுரைக்கிளை, அனைத்து மாணவர்களும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள எண்ணினால் நிலைமை என்னவாகும்? அரசு வழங்கும் சேவையை பயன்படுத்திக் கொள்ள கட்டணத்தை செலுத்துவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி, அந்த மனுவை தள்ளுபடி செய்தது.